குருநகரை பிறப்பிடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட S.N.J அன்ரனிபிள்ளை இன்று காலை சுகவீனம் காரணமாக இறைபதம் அடைந்தார்.திரு S.N.J அன்ரனிபிள்ளை அவர்கள் குருநகர் பாடும்மீன் கழகத்தின் பிதாமகரும்,
கழக நட்சத்திர வீரரும், கழக பயிற்றுவிப்பாளரும்,புனித பத்திரிசியார் கல்லூரி உதைபந்தாட்ட அணித்தலைவர் மற்றும் கல்லூரி கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரும், பாடசாலை மட்டத்தில் யாழ்பாணத்தின் சிறந்த விக்கெட் காப்பாளரும், குண்டெறிதல்,தட்டெறிதல் சாதனை நாயகனும்,யாழ் உதைபந்தாட்ட தெரிவு அணியின் முன்னாள் தலைவரும்,
இலங்கை இளைஞர் அணியின் விளையாட்டு வீரரும்,கொழும்பு சண்றைஸ் அணியின் விளையாட்டு வீரர் மற்றும் முன்னாள் தலைவரும்,இலங்கை தேசிய அணியின் விளையாட்டு வீரரும்,இலங்கை தேசிய அணிக்காக தாய்லாந்து, மலேசியா,இந்தியா,போன்ற வெளிநாடுகளில் விளையாடியவரும், உலக உதைபந்தாட்ட ஜாம்பவான்ஆன பெலே காலத்து பிறேசில் அணியுடன் இலங்கையில் காட்சி போட்டியில் விளையாடியவரும், பிரான்சு பாடும்மீன் கழக முன்னாள் வீரர், முன்னாள் பயிற்றுவிப்பாளர்,
பிரான்சு பாடும்மீன் கழக முன்னாள் தலைவரும்,பிரான்சில் ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளன உருவாக்கத்தில் முக்கியமானவரும், சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும்,சம்மேளன பயிற்றுவிப்பாளரும்,மற்றும் பயிற்றுவிப்பாளரை பயிற்றுவிக்கும் பயிற்சியாளரும்,பிரான்சு ஈழத்தமிழர் விளையாட்டுதுறை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவரும் நிர்வாகத்தின் முக்கிய பிரமுகரும் ஆவார்