ராய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை பிரிவின் டிஐஜியான சுந்தர்ராஜ் இந்த தகவலை தெரிவித்தார்.
ஆரம்பகட்ட தகவல்களின்படி பீமா மண்டவி மற்றும் அவரது 4 பாதுகாப்புபடை அதிகாரிகள் ஆகியோர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
படத்தின் காப்புரிImage capti
தண்டேவாடா-சுக்மா சாலை வழித்தடத்தில் அமைந்துள்ள நகுல்னார் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்கட்ட மக்களவைத் தேர்தல் இன்னும் 36 மணி நேரத்தில் நடக்க இருக்கும் சூழலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
பாஜக சட்டமன்ற உறுப்பினரான பீமா மண்டவி பயணம் செய்த வாகனம் கடுமையாக சேதமடைந்து இருப்பதாக சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கரில் ஏப்ரல் 11, 18 மற்றும் 23 ஆகிய மூன்று கட்டங்களாக மக்களவை தேர்தல் நடக்கவுள்ளது.