சற்று முன்னர் முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac இன் இறுதிச்சடங்குகள் ஆரம்பிக்கப்படுள்ளன.
ஜனாதிபதி மாளிகையான எலிசே மாளிகை முற்றத்தில் இடம்பெற இருந்த இந்த நிகழ்வு, Jacques Chirac குடும்பத்தினரின் கோரிக்கையை அடுத்து les Invalides இல் இடம்பெற்றுவருகின்றது.
Jacques Chirac இன் உடலம் தாங்கிய சவப்பெட்டி சற்று முன்னர் les Invalides முற்றத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தவிர ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்துள்ளார்.
இராணுவ அணிவகுப்பு உள்ளிட்ட கடமைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இராணுவ அமைச்சர் Florence Parly உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இன் நிகழ்வில் பல உலக நாட்டுத; தலைவர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் அமைச்சரகள் கலத்து கொண்டுள்ளனர் இதனையடுத்து paris பாதுகாப்பு பலப்படுத்துள்ளது.