சிந்து நதி நீரை திசை திருப்பினால் பதிலடி கொடுக்கும் உரிமை எமக்கு உள்ளது – பாகிஸ்தான்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2019 (வியாழக்கிழமை)
எனவே இந்தியா அதைத் தடுத்தாலோ அல்லது திசை மாற்ற முயற்சித்தாலோ அந்த அக்கிரமிப்புக்கு பதிலடி கொடுக்கும் உரிமை பாகிஸ்தானுக்கு உள்ளது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றினார், “கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவுக்குச் சொந்தமான நீர், ஹரியானா விவசாயிகளுக்குச் சொந்தமான நீர் பாகிஸ்தான் பக்கம் பாய்கிறது. இந்த நீரை மோடியாகிய நான் தடுத்து நிறுத்தி, உங்களுடைய நிலங்களுக்கும், வீடுகளுக்கும் கொண்டு வருவேன்” என்று கூறியிருந்தார்.
அதற்கு முகமது பைசல் கூறுகையில், “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி மேற்கு நோக்கிப் பாயும் மூன்று நதிகள் மீது எங்களுக்கு முழுமையான உரிமை இருக்கிறது. அந்த நதி நீரை திசை மாற்றவோ அல்லது தடுக்கவோ இந்தியா முயன்றால் அது ஆக்கிரமிப்பாகவே கருதப்படும். அதற்குப் பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.