இன்னும் சில மணிநேரங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு நல்கின்ற நாடாளுமன்றத்தை அமைப்போம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்பு முன்வைத்து வரும் தேசிய அரசாங்கம் அமைக்கும் யோசனையையும் அவர் இதன்போது நிராகரித்துள்ளார்.