FRANCEல் இன்று நள்ளிரவு முதல் உணவகங்கள், திரையரங்குகள் , களியாட்டத் தளங்கள், மற்றும் அத்தியாவசிய தேவையற்ற விற்பனை நிலையங்கள் யாவும் காலவரையின்றி மூடப்படும்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/03/2020 (சனிக்கிழமை)
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய தடை, உணவகங்கள், அருந்தகங்கள், திரையரங்குகள் மூடுமாறு உத்தரவு!
இன்று இரவு (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் அத்தியாவசியமற்ற மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்படல் வேண்டும்.
உணவகங்கள் (restaurants), அருந்தகங்கள் (café -Bar), திரையரங்குகள் என அனைத்தும் உடனடியாக இன்று நள்ளிரவுடன் மூடப்படல் வேண்டும் எனப், பிரதமர் எதுவார் பிலிப் அதிரடியான உத்தரவை வழங்கி உள்ளார்.
மக்கள் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக இந்த நடவடிக்கைகளிற்கு ஒத்துழைக்குமாறு கோரி உள்ளார்.
ஆனால் அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் விற்கும் கடைகள், வங்கிகள், மருந்தகங்கள், போன்ற சேவைகள் தொடர்ந்தும் இயங்கும் எனப் பிரதமர் அறிவித்துள்ளார்.