தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றும், தாங்கள் கொரோனாவை வென்றுவிட்டதாகவும் கூறியுள்ளது வட கொரியா!
பிரசுரிக்கபட்ட திகதி: 18/03/2020 (புதன்கிழமை)
30 நாள் தனிமைப்படுத்துதல், மூடிய எல்லைகள் சீனாவுடனான வர்த்தகம் நிறுத்தம் ஆகிய விடயங்கள், வட கொரியாவை கொரோனா அற்ற நாடாக ஆக்கிவிட்டதாக அதன் அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான வட சீனாவில் கொரோனாவுக்கு 3,200 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், வட கொரியா தங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என ஜம்பமடித்துக்கொண்டுள்ளது.
ஆனால், சில நிபுணர்கள் அது உண்மையில்லை என்று எண்ணுகின்றனர். வட கொரியாவில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று இல்லை என்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார் வட கொரியா குறித்த விடயங்களை ஆராயும் முன்னாள் CIA நிபுணரான Jung H.Pak.
வட கொரியாவின் பொருளாதாரம், மனித உரிமைகள் மீறல் மற்றும் பிற குற்றச்செயல்களிலிருந்து உலகின் கவனத்தை திசை திருப்பவே கிம் இப்படி வழக்கம்போல ஜம்பமடித்துக் கொள்கிறார் என்கிறார் அவர்.
இதற்கிடையில், வட கொரிய அலுவலர்கள், தாங்கள் 5,400 பேருக்கும் அதிகமானவர்களை தனிமைப்படுத்தியிருந்த நிலையில், அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்ததால், அவர்களை விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.