கொரோனா தொற்றிய யாழ் செம்மணி கிறீஸ்தவ மதபோதகரின் இருப்பிடம் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2020 (சனிக்கிழமை)
கிறீஸ்தவ மதத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்தில் பெருமளவு மக்களை தங்கள் மதத்துக்கு மாற்றி வந்தனர். மதம் மாறியவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழைகளே…. இவ்வாறான மதம்மாற்ற குழுவின் பிரச்சாரத்திற்காக சுவிஸ் நாட்டில் இருந்து வந்த தமிழ் மதம் மாற்றி ஒருவன் கொறோனாவால் பாதிக்கப்பட்டுள்ளான். அவன் யாழ்ப்பாணத்தில் குறித்த மதப்பிரிவைச் சேர்ந்தவர்களில் ஏராளமானவர்களுக்கு கொரோனா நோயைப் பரப்பியிருக்கலாம் என சந்தேகிக்பப்டுகின்றது. ஆகவே இவ்வாறான மதப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் உடனடியாக அப்பகுதி கிராமசேவகருக்கோ அல்லது பொலிசாருக்கோ அல்லது சுகாதார உத்தியோகத்தருக்கோ உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு அப்பகுதி மக்களை சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொள்கின்றார்கள்.
இவ்வாறான மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள் எந்த நோய் வந்தாலும் அதற்காக வைத்தியசாலைக்கு செல்லாமல் இருப்பவர்கள் எனவும் எனவே இவர்களால் பெரும் அபாயம் ஏற்படலாம் எனவும் ஆகவே பொதுமக்கள் இவர்கள் தொடர்பாக உசார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம் எனவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகி வருகின்றன.
கடந்த 15ம் திகதி குறித்த தேவாலயத்தில் வெளிநாட்டிலிருந்த வந்த மதபோதகா் ஒருவாினால் நடத்தப்பட்ட ஆராத னையில் கலந்து கொண்ட இருவா் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். இந்த ஆராதனை நிகழ்வில் வேறு பகுதிகளை சோ்ந்தவா்கள், மாவட்டங்களை சோ்ந்தவா்கள் என பலா் கலந்து கொண்டுள்ளனா். இவா்கள் உடனடியாக தமது பெயா் மற்றும் இரு ப்பிட விலாசம் என்பவற்றை 0212217278 என்ற முகவாிக்கு உடனடியாக அறியத்தரவும் என அவா் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றாா்.
சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த போதகர் மற்றும் கொரோனா சம்பந்தமான மேலதிக தகவல்கள்:
குறித்த ஆராதனைக்கு ஏறத்தாழ 250 வரையானவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். பொதுமக்கள் நாவற்குழி, யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் மானிப்பாய் பகுதியைச் சார்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையினர் தற்போது இவர்களது இருப்பிடங்களைக் கண்டறிந்து தனிப்படுத்தல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இதுவரையில் போதகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இருவர் கொரோனா நோய்க்கான அறிகுறிகளுடன் யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் சிலர் நோய் அறிகுறிகளுடன் காணப்படுவதாகவும் அனைவரையும் வைத்தியசாலையில் அனுமதிப்பதை வைத்தியசாலை நிர்வாகம் விருமபவில்லை எனவும் அறிய முடிகின்றது. குறித்த போதகரின் நோய் நிலைமையை உறுதிப்படுத்தும் முகமாக அவருடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு