<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/2bEvT0OAfeg" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி கடுமையாக பாதிக்கப்பட்ட தீவிர சிகிச்சையளிக்க வேண்டிய ஒரு பிரான்சின் ஒரு தொகுதி நோயாளிகளுக்கு மூன்று ஐரோப்பிய நாடுகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
முதற்கட்டமாக 55 நோயாளர்கள் பிரான்சில் இருந்து ஜேர்மனி, லக்செம்பேர்க், சுவிஸ் ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பிரான்சில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 3375 பேருக்கு செயற்கை சுவாசவழங்கிகள் உட்பட அவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையும் இடநெருக்டியும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே பிரான்சின் தோழமை நாடுகள் பிரான்சில் இருந்து நோயாளிகளை உள்வாங்கி சிகிச்சையளிக்கத் தொடங்கியுள்ளன.
ஜேர்மனி, லக்செம்பேர்க், சுவிஸ் ஆகிய நாடுகளின் தோழமைக்கு அதிபர் ஏமானுவல் மக்ரோன் நன்றி தெரிவித்துள்ளார்.
ஜேர்மனி 25 000 தீவிரசிகிச்சை கட்டில்களை கொண்டிருக்கின்றது. இது பிரான்சை விட நான்கு மடங்கு அதிகமாகும். ஜேர்மனியில் இதுவரை 40 ஆயிரம் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, 262 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுவிசில் 12 ஆயிரம் பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு, 200 பேர் பலியாகியுள்ளனர். லக்செம்பேர்கில் 1400 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, 30 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.