தடுப்பு மருந்தினை உருவாக்கும் வரை பலர் வெளியுலகை காண்பதென்பது கேள்விக்குறி!
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2020 (திங்கட்கிழமை)
தடுப்பு மருந்தினை உருவாக்கும் வரை பலர் வெளியுலகை காண்பதென்பது கேள்விக்குறி!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ஓர் தடுப்பு மருந்தினை உருவாக்கும் வரை, வயோதிபர்கள் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வருவது கடினம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இவர்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டிய கட்டாயம் காணப்படுவதாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் Ursula von der Leyen தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தினை எப்போது, எவ்வாறு படிப்படியாக நீக்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய மட்டத்தில் செயற்திட்டம் ஒன்று வரையப்பட்டு வருகின்றது.
சமூக, பொருளாதார, சுகாதரா ரீதியில் ஐரோப்பா மீளக்கட்டமைப்பது தொடர்பில் ஒன்றிய நாடுகள் இடையே ஓர் பொதுஇணக்கப்பாட்டினை காணுவதில் ஒன்றிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
அந்தவகையில் பொதுமுடக்கத்தின் படிமுறை நீக்கம் என்பது, தடுப்பூசியினை கண்டுபிடிக்கும் வரையில், வயோதிபர்கள் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வருவது கடினம் என ஐரோப்பிய ஆணையத் தலைவர் Ursula von der Leyen தெரிவித்துள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், இருப்பினும் இரண்டு ஆண்டுகள் தடுப்பு மருந்துக்கு தேவைப்படலாம் என்ற கருத்தினையும் அவர் தெரிவித்துள்ளார்.