உள்ளிருப்புக் கட்டுப்பாட்டினை மீறுபவர்கள் மீதான காவற்துறையினரின் சோதனைகளை அதிகரிக்குமாறு, ஒவ்வொரு மாவட்ட ஆணையர்களிற்கும் (préfets) உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனன் (Gérald Darmanin) அவசர ஆணையொன்றை அனுப்பி உள்ளார்.
முதல் வாரங்களில் வெறும் எச்சரிக்கையுடன் அனுப்பப்பட்ட, உள்ளிருப்பை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கையும் அபராதமும் விதிக்கும்படியும், வீதிச் சோதனைகளை பெருமளவில் அதிகரிக்கும் படியும், பிரான்சின் அனைத்து மாவட்ட ஆணையாளர்களிற்கும், உள்துறை அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.