பிரான்சில் கண்டறியப்படும் கொரோனா தொற்றுக்களில் 51.7% வீதமானவை டெல்டா திரிபு வைரஸ் ஆகும். கடந்த வாரத்தில் இந்த எண்ணிக்கை 30% வீதமாக மாத்திரமே இருந்தது. தலைநகரில் பரிசில் ஒவ்வொரு 100.000 பேரிலும் 83 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகின்றது.
கிட்டத்தட்ட நான்காம் தொற்று அலை ஆரம்பித்துள்ள நிலையில், இன்றைய ஜனாதிபதியின் உரை மிக மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது.
எளிமை நடவடிக்கைகள்!
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்று வீதம் 200 ஐ தாண்டாத பட்சத்தில் (100.000 பேரில்..) அங்கு கொரோனா நடவடிக்கைகள் மிக எளிமையானதாக தான் இருக்கும். மருத்துவமனை நெருக்கடிகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாவட்டம் முழுவதையும் தனிமைப்படுத்துவதற்கு பதிலாக தடுப்பூசி போடாதவர்களை தனிமைப்படுத்தலாம். நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் ஒரே போன்று தான் இருக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தனிமைப்படுத்தல்!
தடுப்பூசி போட்டாமல் பிரான்சுக்குள் வரும் பயணிகள் அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை இவ்வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.
பாடசாலைகளில் தடுப்பூசி பிரச்சாரம்!
புதிய கல்வி ஆண்டில் இருந்து பாடசாலைகளில் கொரோனா தடுப்பூசி பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என மக்ரோன் அறிவித்தார்.
PCR பரிசோதனைக்கு கட்டணம்!
இந்த இலையுதிர் காலத்தில் இருந்து PCR பரிசோதனைகளுக்கு கட்டணம் அறவிடப்படும். பல்வேறு தடவைகள் பரிசோதனை மேற்கொள்வதற்கு பதிலாக தடுப்பூசி போட ஊக்குவிக்கப்படும் எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.
pass sanitaire!!
12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் pass sanitaire கட்டாயம் என மக்ரோன் அறிவித்துள்ளார். ஜூலை 21 ஆம் திகதியில் இருந்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மக்ரோன், 50 பேருக்கு மேல் கூடும் எந்த ஒரு நிகழ்வுக்கும் சுகாதார அனுமதி சிட்டை (pass sanitaire) கட்டாயம் தேவை எனவும் தெரிவித்தார்.
கட்டாய தடுப்பூசி!
மருத்துவத்துறைக்கு கட்டாய தடுப்பூசி போடப்பட வேண்டும் என மக்ரோன் அறிவித்துள்ளார். ‘பொதுமக்களுடன் போராடும் ஒவ்வொருவரும் தடுப்பூசி போடவேண்டும்.
”அதிகபட்சமானோருக்கு தடுப்பூசி போடப்படவேண்டும். தடுப்பூசி அதிகரித்தால் எங்களுக்கிடையேயான இடைவெளி குறையும்!” எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.
9 மில்லியன் தடுப்பூசிகள்!
9 மில்லியன் தடுப்பூசிகள் தற்போது கைவசம் இருப்பதாக மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
300,000 வேலையிழப்பு!
கொரோனா வைரஸ் 300,000 வேலையிழப்பினை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்த மக்ரோன், மே மாதம் வரை 187.000 வேலைகளை மீள உருவாக்கியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
நாங்கள் வெற்றியடைந்துள்ளோம்!
சற்று முன்னர் நாட்டு மக்களுக்கான உரையை ஆரம்பித்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ”கொரோனா வைரசை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததில் நாங்கள் வெற்றியடைந்துள்ளோம்!” என தெரிவித்தார்.
”மருத்துவத்துறையினரின் விதிவிலக்கற்ற முயற்சிக்கு எனது நன்றிகள்” எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.