அதுவாகவே அழியும் வாக்கு மை : ஆர்.கே.நகர் தொகுதியில் பரபரப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2016 (திங்கட்கிழமை)
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்களிப்பவர்களின் விரலில் வைக்கப்படும் மை உடனடியாக அழிந்து விடுவதாக புகார் எழுந்தது. இதனால், மற்ற கட்சி பூத் ஏஜெண்டுகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு சிறுது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் ஜெயலலிதாவும், திமுக சார்பில் சிம்லா முத்து சோழனும், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வசந்தி தேவியும் போட்டியிடுகின்றனர்.
அந்த தொகுதியில் பொதுமக்கள் வாக்கு அளித்துக் கொண்டிருந்த போது, திடீரெனெ மின்சாரம் தடைபட்டு, சில நிமிடங்கள் கழித்து வந்தது. அப்போது ஓட்டு அளித்தவர்களின் கை விரலில் இடப்பட்டிருந்த மை அழிந்து விடுவதாக எதிர்கட்சியை சேர்ந்த பூஜ் ஏஜெண்டுகள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் வாக்களிக்க வந்த மக்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது திடீரென விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
இதுபற்றி எதிர்கட்சியை சேர்ந்த பூத் ஏஜெண்டுகள் கூறும்போது “அதிகாரிகளுக்கு தெரிந்துதான் இது நடக்கிறது. கள்ள ஓட்டு போடுவதற்காகத்தான் ஆளுங்கட்சியினர் இப்படி நடந்து கொள்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினர். மேலும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.