கொலம்பியாவில் பிரபல போதை மருந்து கடத்தல் கும்பலிடமிருந்து 8.8 தொன் கொக்கைன் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பனாமா எல்லையையொட்டி அமைந்துள்ள உராபா பகுதியில், டர்போ என்னுமிடத்தில் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட அதிரடி சோதனையில், வாழைத்தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8.8 தொன் கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் பெறுமதி 240 மில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்படுகிறது. புகழ்பெற்ற "உசுகா' கடத்தல் கும்பல் இந்த போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடல் பகுதியில் பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டைகளில் அதிக அளவு கொக்கைன் பொதைப் பொருள் கைப்பற்றபற்றிருந்தாலும், நில எல்லைக்குள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் லூயிஸ் கார்லோஸ் வில்லேஜாஸ் தெரிவித்துள்ளார்.