சென்னை,மே 14 (டி.என்.எஸ்) வைகை புயல் என்ற பட்டத்துடன் கோடம்பாக்கத்தில் காமெடி புயலாக வலம் வந்த வடிவேலு, திரையில் தெரிந்தாலே, மக்கள் சிறித்து விடுவார்கள். அந்த அளவுக்கு தான் நடிக்கும் படங்களில் காமெடி கலவரத்தை ஏற்படுத்தி வந்த வடிவேலு, அரசியல் ஆசையால் தனது சினிமா வாழ்க்கையை சில காலம் தொலைத்துவிட்டார்.
மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்தவர், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று இரண்டு படங்களில் நடித்தார். அந்த படத்தில் சில காமெடிக் காட்சிகள் ரசிக்க வைத்தாலும், படம் வெற்றி பெறவில்லை.
இதற்கிடையில், நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியுடன் சேர்ந்து பணிபுரிந்த வடிவேலு, தற்போது காமெடி வேடங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள. இதையடுத்து, விஷால் நடிக்கும் ‘கத்தி சண்டை’ படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான வடிவேலுவின் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் சில படங்களிலும் காமெடி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
வடிவேலு காமெடி வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, ஏகப்பட்ட தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய வரிசையில் நிற்கிறார்களாம். இந்த வரவேற்பு வடிவேலுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், பரோட்டா சூரிக்கு பெரும் துன்பத்தை கொடுத்துள்ளது.
வடிவேலு இல்லாத கேப்பை பயன்படுத்திக் கொண்டு, முன்னணி காமெடி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த சூரி, தனது மொக்கையான காமெடியால் இதுவரை வண்டி ஓட்டி வந்தார். தற்போது வடிவேலு காமெடி வேடத்தில் நடிப்பதால், அனைவரது சாய்ஸும் வடிவேல் என்று கூற, சூரிக்கு வாய்ப்பு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கத்தி சண்டை படத்தில் சூரியும் நடிக்கிறாராம். ஆனால், இதில் வடிவேலுக்கு தான் முக்கிய இடமாம். மொத்தத்தில், பரோட்டாவாக இருந்த சூரிக்கு இனி சால்னா போன்ற வேடங்கள் தான் கிடைக்கும் என்றும் கோடம்பாக்க டீ கடைகளில் பேசி வருகிறார்களாம்.