டெல்லியில் அதிமுக-திமுக அமைத்த "அரிய" கூட்டணி....!
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2016 (வியாழக்கிழமை)
டெல்லில் 'அதிமுக- திமுக கூட்டணி அமைத்த "அரிய"காட்சிகள் என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் சில படங்கள் உலா வருகின்றன.கடந்த ஆண்டு ஒரு மனைவியின் பிரிவு எத்தனை துயரமானது என்பதை வெளிப்படுத்தியிருந்தவர் திமுகவின் ராஜ்யசபா எம்.பி. திருச்சி. அவர் எழுதிய "மனைவிக்கு நேரம் ஒதுக்குங்கள்" கட்டுரை பலரையும் உலுக்கியிருந்தது.
திமுகவில் திராவிடர் இயக்க கொள்கைகளை ஆழ்ந்து படித்தவர்களில் ஒருவராக அறிவுஜீவியாக இருப்பவர் திருச்சி சிவா. தற்போது திருச்சி சிவாவும் அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவும் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் புயலை கிளப்பி வருகின்றன.
மனைவிக்கு முக்கியத்தும் கொடுத்து நெக்குருக பேசிய எழுதிய திருச்சி சிவாவா இப்படி? என கொதித்து போயிருக்கிறார்கள் அவரது அபிமானிகள்.... அண்மையில் அதிமுகவின் எம்.பி. சசிகலா புஷ்பா தான் மது அருந்தியுள்ளதாக தனது நண்பருடன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.