கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நஷீருக்கு, கடற்படை, விமானப்படை மற்றும் இராணுவ முகாம்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. சம்பூர் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற வைபவத்தின் போது, கடற்படை அதிகாரியொருவரை திட்டியதையடுத்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.
அத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கின்ற எந்தவொரு வைபவங்களிலும் முப்படையினரும் பங்கேற்கமாட்டார்கள் என்றும் தீர்மாகிக்கப்பட்டுள்ளது.