சிம்பு, நயன்தாரா இருவரும் காதலித்தது பின் பிரிந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்கள் மீண்டும் இது நம்ம ஆளு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பாண்டிராஜ் கலந்துக்கொண்டு பேசுகையில் ‘படத்தில் மட்டுமில்லை, படப்பிடிப்பிற்கு வெளியிலும் சிம்பு-நயன்தாரா சண்டைப்போடுவார்கள்.நயன்தாரா மேக்கப் எல்லாம் போட்டு 2 மணி நேரம் காத்திருக்கும், பிறகு தான் சிம்பு வருவார், அவர் வந்தவுடன் நயன்தாரா தான் முதலில் திட்ட ஆரம்பிப்பார்.சிம்புவும் பல காரணங்கள் சொல்ல, அட இது நல்ல இருக்கே என இவர்கள் சண்டையையும் படத்தில் வைத்து விட்டோம்’ என கலாட்டவாக பேசியுள்ளார்.