பாரிசில் சுட்டுக்கொல்ல பாவிக்கப்பட்ட ஆயுதங்களை லண்டனுக்கு கடத்திய நபர்கள் அதிரடியாக மடக்கி பிடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2016 (வெள்ளிக்கிழமை)
பிரித்தானியப் பொலிசார் ஓல்ட் பெயிலி நீதிமன்றில் கொண்டுவந்து நிறுத்திய 6 பேரையும் தடுப்புக்காவலுக்கு மாற்ற அன் நீதிமன்றம் நேற்று உத்தரவிடடது. ஓசை படாமல் இவர்களை எப்போது பொலிசார் கைதுசெய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் 20க்கும் மேற்பட்ட இயந்திரத் துப்பாக்கிகளையும், சிறிய ரக ஆயுதங்களையும் பிரித்தானியாவுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். பிரான்ஸ் நாட்டில் இருந்து சிறிய படகு மூலம் பிரித்தானியாவுக்குள் இவர்கள் இந்தப் பயங்கர ஆயுதங்களை கொண்டுவந்தது, முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு தான் என்பது ஒரு புறம் அதிர்சியாக இருக்க. மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அது என்னவென்றால் இவர்கள் அனைவருமே வெள்ளை இனத்தவர்கள் என்பது தான். பரிஸ் நகரில் உள்ள சாளி ஹெட்போ என்னும் சஞ்சிகை அலுவலகத்தினுள் புகுந்து தீவிரவாதிகள் சுட்ட சம்பவம் அனைவருக்கும் நினைவிருக்கும். குறித்த இடத்தில் இருந்து. அல்லது அங்கே சுட பாவிக்கப்பட்ட அதே ஆயுதங்களை தான் இந்த வெள்ளை இனத்தவர்கள் , பிரித்தானியாவுக்குள் கடத்தி வந்துள்ளதாக பொலிசார் நம்புகிறார்கள். பெருந்தொகைப் பணத்திற்கு ஆசைப்பட்டே இவர்கள் இவ்வாறு செய்திருக்கவேண்டும் என்றும் கூறப்படுகிறது. பிரித்தானியாவில் இந்த ஆயுதங்களை வைத்து பாரிய அளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றை, நடத்த ஐ.எஸ் அமைப்பு திட்டம் தீட்டி இருந்துள்ளது.
ஆனால் அதனை வெற்றிகரமாக , மற்றும் ஓசை படாமல் பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினர் செய்து முடித்துள்ளார்கள். அவர்கள் இந்த 6 பேரையும் நீதிமன்றில் நேற்று நிறுத்திய பின்னர் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பதே மீடியாக்களுக்கு கசிந்துள்ளது. 23 வயதுடைய நபர்(பெயர் குறிப்பிடப்படவில்லை) மைக்கல் டெவ்பிரினி(30), டேவிட் பெயின்(43) , ரிச்சாட் ரே(24) , கிறிஸ்டபர் ஒவன்(30) ,ஜோன் சாமுவேல்(58) ஜெனிபர் ஆர்த்தி என்று கைதான அனைவரையும் பொலிசார் , நேற்று நீதிமன்றில் ஆஜர் படுத்தினார்கள். அனைவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்கள். பாரிய உயிர் ஆபத்தை விளைவிக்கவே நீங்கள் ஆயுதங்களை கொண்டுவந்து இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரிகிறதா என்று நீதவான் கேட்டவேளை , ஆம் என்று அனைவரும் பதில் கூறியுள்ளார்கள்.
இவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை தீர்ப்பாக கிடைக்கலாம் என்று , ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.