கணவனை இழந்த பெண் கர்ப்பம்: அரச ஊழியர் அலுவலகத்தில் பத்திரகாளியாக மாறிய பெண்.
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2016 (சனிக்கிழமை)
யாழ் அரச ஊழியர் நிலையத்தில் பத்திரகாளியாக மாறிய பெண், அங்கே தனது கணவரை தாக்க முற்பட. அவர் அங்கிருந்து நூதனமான முறையில் தப்பிச் சென்றார். வெளியே நின்ற அவரது மோட்டார் சைக்கிளை காலாட் எட்டி உதைத்து சேதப்படுத்திய மனைவி பெரும் கூச்சலிட்டு குழப்பத்தை ஏற்படுத்த, இங்கே என்ன நடக்கிறது என்று அறிய அதிர்வின் புலனாய்வு நிருபர் சென்று சேகரித்த தகவல் தான் இவை.
யாழ் அரச ஊழியர் நிலையம் ஒன்றில்(திணைக்களத்தின் பெயரை குறிப்பிடவில்லை) கணவனை இழந்த இளம் விதவை ஒருவர் சமீபத்தில் மாற்றலாகி வேலைக்கு வந்துள்ளார். அவர் அலுவலகத்தில் ஒரு நாள், திடீரென வாந்தி எடுத்தது மட்டுமல்லாது மயக்கமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து சக பெண் ஊழியர்கள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல. அவரை பரிசோதித்த வைத்திய அப்பெண் கர்பமாக இருப்பதாக குண்டை தூக்கிப் போட்டுள்ளார். இதனை அப்படியே அமுக்கி வாசித்த அவரது நண்பிகள். அலுவலகத்தில் எதனையும் யாருக்கும் தெரிவிக்காது , அமுக்கிவிட்டார்கள். இன் நிலையில் கடந்த 2 வாரமாக அப்பெண் ஊழியர் லீவு எடுத்துக்கொண்டு எங்கோ சென்றுவிட்டார். அலுவலகத்தில் வேலை பார்க்கும் 45 வயதாகும் 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இப்பெண்ணோடு நட்ப்பு ரீதியாக பழகி வந்ததாகவும்.
அவரே இப்பெண்ணுக்கு அடிக்கடி சாப்பாடு வாங்கி வந்துகொடுப்பதாகவும் அரசல் புரசலாக பேச்சு அடிபட்டு வந்த நிலையில். அவரின் மனைவிக்கு யாரோ அனாமதேய தொலைபேசி அழைப்பை விடுத்து. பெண் ஊழியர் கர்பம் தொடர்பாகவும். உங்கள் கணவரே நட்பு ரீதியாக பழகி வந்தார் என்று கூறியுள்ளதோடு. கர்பமான பெண் ஊழியரின் தொலைபேசி இலக்கம். அதில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் வைபர் ஊடாகவும் அவரோடு பேசலாம் என்று பல தகவல்களை கொடுத்து பற்றவைத்துள்ளார்கள். இதனை அறிந்த மனைவை உடனடியாக அலுவலகம் வந்து பெரும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளார். நிலமையை சமாளிக்க அரச அதிகாரிகள் அவரை சாந்தப்படுத்த முயற்ச்சி செய்ததோடு. கர்பமான பெண்ணுக்கு போன் போட்டு பேசவும் முற்பட்டுள்ளார்கள்.
ஆனால் அவரது பேன் செயல் இழந்த நிலையில் இருக்கிறது. தன்னைப் பிடிக்காத நபர்கள் சிலர் தன் மனைவியிடம் இப்படி தன்னை மாட்டி விட்டார்கள் என்று 45 வயதாகும் அரச ஊழியர் தெரிவிக்கிறார். கணவனை இழந்து தற்போது கர்பமாக இருக்கும் பெண்ணோ தலை மறைவு. இன் நிலையில் சாட்சி சொல்ல யார் வருவது ? ஒட்டு மொத்தத்தில் இந்த பற்றவைத்த கோஷ்டி போல பலர் யாழில் உலவிவருகிறார்கள் போலத் தெரிகிறது. அரச ஊழியர் நிலையம் பெரும் களோபரத்திற்கு உள்ளாகியுள்ளது.