யாரும் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க முடியாது:முகமது அலியின் நினைவு அஞ்சலி கூட்டத்தில் அதிபர் ஒபாமா பேச்சு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2016 (சனிக்கிழமை)
குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வாழ்க்கை குறித்த உணர்ச்சிமிக்க நினைவஞ்சலி கூட்டம் கென்டக்கி மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவை சேர்ந்த குத்துச்சண்டை ஜாம்பவானான (74 வயது) முகமது அலி கடந்த 4–ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான கெண்டகி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லே நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அவரது உடல் காரில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் முகமது அலியின் வாழ்க்கை குறித்து நினைவு அஞ்சலி கூட்டம் கென்டக்கி மாகாணத்தில் நடைபெற்றது. இந்த நினைவு அஞ்சலி கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா,முகமது அலியின் மனைவி,முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகமது அலி குறித்து முகமது அலியின் மனைவி கூறியதாவது:
முகமது அலி எதிர்கொண்ட சோதனைகளை எந்தவித மனக்கசப்பி இன்றி எதிர்கொண்டார். மேலும் முகமது அலியின் குணத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.
அதிபர் ஒபாமா கூறுகையில்,
முகமது அலி பெரியவர். பிரகாசமான மனிதர், உண்மையானவர். இந்த சகாப்தத்தில் அவர் வாழ்ந்த காலத்தில் எல்லோரையும் விட யாரும் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க முடியாது என்று கூறினார்.
முன்னாள் அதிபர் கிளிண்டன் கூறுகையில்,
முகமது அலி மோசமான நோயை எதிர்கொண்ட போதிலும் அவரது நகைச்சுவை உணர்வும் கண்ணியத்தையும் காட்டுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பல்வேறு மதங்கள் மற்றும் குழுக்களை சேர்ந்த பேச்சாளர்கள், முகமது அலியின் விளையாட்டு குறித்தும், சமூகத்தில் அவர் செய்த சாதனைகள் குறித்தும் கூட்டத்தில் திரண்டிருந்த 14 ஆயிரம் பேர் முன்னிலையில் உரையாற்றினார்கள்.