வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரித்த இலங்கை - அமெரிக்க காங்கிரஸ் அதிருப்தி!
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2016 (சனிக்கிழமை)
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பினை இலங்கை அரசாங்கம் நிராகரித்தமை குறித்து அதிருப்தியும் ஏமாற்றமும் வெளியிட்டுள்ளது அமெரிக்க காங்கிரஸ். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தீர்மானம் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் சபையின் வெளிவிவகாரக் குழு அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் காணப்பட்டதாக காங்கிரஸ் வெளிவிவகாரக் குழுவின் தலைவர் மெட் சல்மோன் தெரிவித்துள்ளார். எனினும், கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளது. எவ்வாறெனினும், வெளிநாட்டு நீதவான்களை நிராகரித்தமை உள்ளிட்ட சில பிரச்சினைகள் தொடர்கிறது. சீனாவுடனான இலங்கையின் உறவுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.