சுமந்திரனும், சிறிலங்கா அரசின் தூதுவர் காரியவம்சமும் இணைந்து உத்தியோகபற்றற்ற குழு ஒன்றின் முன் பேச உள்ளார்கள். இந்த குழுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுமந்திரன் தமிழருக்காக குரல் கொடுக்காமல் வழமைபோன்று சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்குவார் என நம்பப்படுகின்றது. தமிழர் விடுதலைக்கு சுமந்திரன் புதியவர் என்பது எல்லோரும் அறிந்ததே. நீண்ட காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்து பங்காற்றியவர் மட்டுமன்றி சிங்கள அரசாங்கத்தினை பாதுகாப்பதில் முன்னணி வகித்ததுவும் எல்லோரும் அறிந்ததே.
சுமந்திரனின் இந்த விஜயத்தின் போது இவர் சிறிலங்காவுக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைப்பது மட்டுமல்ல, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விடையத்தில் சிறிலங்கா அரசாங்கம் சரியான வழியை கடைப்பிடிப்பதாக கூறுவார் என்று அறியப்படுகின்றது.
தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் ஆட்கடத்தல்கள், கற்பழிப்புச் சம்பவங்கள், ஆயிரக்கணக்கான காணாமல் போனோர் நிலைமைகள், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, முள்ளிவாய்க்கால் போற்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பை எதிர்க்கும் அரசின் நிலைப்பாடு, 90, ஆயிரம் தமிழ் போர் விதவைகள், வடகிழக்கு இணைப்பு, எல்லா சமயத்திற்கும் சம உரிமை, ஆகியன பற்றி சுமந்திரன் மூச்சு விட போவதில்லை என்பது எல்லோரும் அறிந்ததே.
இந்த உத்தியோக பற்றற்ற குழு சுமந்திரனை அழைத்திருந்தாலும், அவருக்கான பயணச்சீட்டு, தங்கும் வசதி ஆகியவற்றினை கொடுக்கவில்லை. இந்த செலவுகளை சிங்கள அரசுக்கு சார்பான குழுவான USTPAC வழங்கியுள்ளார்கள் என்று அறியப்படுகின்றது. இதே USTPAC குழுதான் சமீபத்தில் அமெரிக்கா வந்த அமைச்சர் மங்கள சமரவீரவை இரகசியமாக சந்தித்து உரையாடி உள்ளார்கள். இவர்கள் பலமுறை சிறிலங்காவிற்கு சென்று சிங்கள அரசின் அமைச்சர்களை சந்தித்து அவர்களின் விருந்தினர்களாக இருந்திருக்கின்றார்கள்.