குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு! - நிஷா பிஸ்வால்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2016 (புதன்கிழமை)
இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு பொறுப்புகூற வேண்டுமென்பதே அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாடு என தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கத் துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஷ்வால் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியனவற்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்னும் பல விடயங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் உருவாக்கப்பட உள்ளமை வரவேற்கப்பட வேண்டியது. 2015ம் ஆண்டில் ஆட்சி அமைத்த புதிய அரசாங்கம் சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.