போர்க்குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்! சொல்வது சரத் பொன்சேகா
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2016 (வெள்ளிக்கிழமை)
குற்றம் செய்திருந்தால் யாராக இருந்தாலும் அவர் தண்டிக்கப்பட வேண்டும். யுத்தம் வெற்றிகொள்ளப்பட்ட காரணத்திற்காக யுத்தத்தில் குற்றம் செய்தவர்கள் சட்டத்தை மீற அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு என்றால் என்னவென்றே தெரியாத பொது எதிரணியினர், அரசியல் இலாபத்திற்காக தேசிய பாதுகாப்பு குறித்து பொய்யாக கூச்சலிடுகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சலாவ இராணுவமுகாமின் ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்புச் சம்பவத்துடன் வெளிநாட்டுத் தொடர்பு இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மை கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். "நாட்டில் பெருமளவிலான தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்து வெளிமாவட்டங்களில் வாழ்கின்றார்கள். தேசிய ரீதியில் சமாதானத்தையும், சமத்துவத்தையும் கட்டியெழுப்ப வேண்டுமானால் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணையவேண்டும்" என்றும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.