மதம் கொண்ட யானையை மடக்கிய சினம் கொண்ட போலீஸ் சிறுத்தை: சுவாரஸ்யமான மல்யுத்த அரியானாவில் நடைபெற்ற பயிற்சிமுறை மல்யுத்தப் போட்டியில் ‘என்னை வெல்ல யாரிருக்கா?’ என்று சவால்விட்ட தொழில்முறை வீராங்கனையை முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி ‘நாக்அவுட்’ செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பிரபல மல்யுத்த வீரரான ‘தி கிரேட் காலி’ என்பவரால் கடந்த ஆண்டு துவக்கப்பட்ட இந்திய மல்யுத்த பயிற்சி கழகத்தின் சார்பில் சிறந்த குத்துச் சண்டை வீராங்கனையை தேர்வு செய்வதற்கான போட்டி அரியானா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தனது திறமையை காட்டி அசத்திய பிபி புல்புல் என்ற வீராங்கனை, வெற்றிபெற்ற திமிரில், ‘என்னை வெல்ல யாரிருக்கா?’ என்று ரசிகர் கூட்டத்தை நோக்கி வெறித்தனமாக கூச்சலிட்டார்.
ஆஜானுபாகவாக மதயானை போல் பிளிறிய புல்புல்லின் சவாலை ஏற்ற ஒரு வீரமங்கை மேடையை நோக்கி விரைய.., ரசிகர்கள் ஆரவாரமாக கூச்சலிட்டனர். மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்த அந்தப் பெண் மேடையேறிய சில நிமிடங்களில், சிறுத்தையாகமாறி இரண்டே பாய்ச்சலில் அந்த மதயானையை சாய்த்து வீழ்த்தினார்.
மஞ்சள் நிற சுடிதாரில் பார்வைக்கு குடும்பத் தலைவிபோல் தோன்றிய அந்தப் பெண் அரியானா மாநிலத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிவர் என பின்னர் தெரியவந்தது. பளு தூக்குதல் மற்றும் சகலவகை தற்காப்பு கலைகளையும் கற்றுத் தேர்ந்திருந்த கவிதா என்ற அந்த வீரமங்கையின் பாய்ச்சலைக் காண..,