மைக்கேல் ஜாக்சனின் வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கிய குழந்தைகளின் நிர்வாணப்படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2016 (புதன்கிழமை)
பாப் இசை உலகில் மன்னராக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். தனது நடன அசைவுகளாலும், அசாத்திய குரல் வளமையாலும் பல லட்சக்கணக்கான ரசிகர்களை உலகெங்கிலும் கொண்டவர். கடந்த 2009ம் ஆண்டு அளவுக்கதிகமாக உட்கொண்ட மருந்து ஏற்படுத்திய மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் மறைந்தாலும் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன. அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்.பி.ஐ. மைக்கேல் ஜாக்சன் கடந்த 1989ம் ஆண்டில் இருந்து பல்வேறு சிறுவர்களுடன் தவறான முறையில் நடந்து கொண்டதாக சில தகவல்களை வெளியிட்டது.
பாப் இசையின் மன்னர் என உலக ரசிகர்களால் அழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சனின் வீட்டினை கடந்த 2003 ஆம் ஆண்டு காவல்துறை சோதனையிட்டதில் கிடைத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தனது நடனத்தால் உலக ரசிகர்களை தன் கைக்குள் வைத்திருந்த மைக்கேல் ஜாக்சன், அமெரிக்காவில் பல்வேறு அனாதை விடுதிகளை நடத்தி வந்தார், இவர் புகழ்பெற்றது போலவே, இவரது அனாதை விடுதிகளும் புகழ்பெற்றது.
ஆனால் காலப்போக்கில், அங்குள்ள குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டிற்கு ஆளாகிய காரணத்தால் இவர் புகழ் சரிய ஆரம்பித்தது, கூடவே இவர் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால் அதுவே இவரது மரணத்திற்கு வழிவகுத்தது.
இவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு வழக்கு 2003 முதல் 2005 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது, 2005 ஆம் தன்னை நிரபராதி என நிரூபித்துகொண்டு அமெரிக்காவைவிட்டு வெளியேறி, பக்ரைனில் குடியேறினார்.
இந்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நெவர்லேண்ட் பண்ணை வீட்டிற்குள் சுமார் 70 போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
இதில், அவரது அறைக்குள் 1 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நிர்வாணப்படங்கள், நிர்வாணப்பட தொகுப்புகள் அடங்கிய புத்தகங்கள், வீடியோக்கள் போன்றவை அதிகமாக இருந்துள்ளன.
மற்றொரு அறையில், டிஸ்னிலேண்டில் இருக்கும் பொம்மைகள் போன்று ஏராளமான பொம்மைகள் காணப்பட்டுள்ளன, இதனை கைப்பற்றிய பொலிசார் இருவிதமான கருத்துக்களை தெரிவித்தனர்.
ஒரு தரப்பினர், குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதற்காக மைக்கேல் ஜாக்சன் இதுபோன்ற பொம்மைகளை பயன்படுத்தியுள்ளார் என்றும் மற்றொரு தரப்பினர், மைக்கேல் ஜாக்சன் நடத்திவரும் அனாதை விடுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு பரிசளிப்பதற்காக இந்த பொம்மைகளை தனது அறைகளில் வைத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது, சோதனையின்போது கிடைத்த புகைப்படங்கள் நீதிமன்றத்தின் அனுமதியோடு வெளியிடப்பட்டுள்ளன.