நிதி அமைச்சரை நாடாளுமன்றத்தில் வைத்தே தாக்க வேண்டும்! - அனுரகுமார
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2016 (வியாழக்கிழமை)
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நாடாளுமன்றத்தில் வைத்தே தாக்க வேண்டும் என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பிழையான ஓர் அறிக்கையை சமர்ப்பித்த நிதி அமைச்சரை முழு நாடாளுமன்றமும் இணைந்து தாக்க வேண்டும். 2015ம் ஆண்டு அறிக்கையின் அடிப்படையில் 2015ம் ஆண்டுக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கிய தொகையை விடவும் அதிகளவு செலவிடப்பட்டுள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தினால் இது குறித்து கண்காணிக்கப்பட்டுள்ளது.
கடன் எல்லையை மீறி அரசாங்கம் கடன் பெற்றுக்கொண்டுள்ளதனை கணக்காய்வாளர் நாயகம் தெளிவுபடுத்தியுள்ளார். அவ்வாறான ஓர் நிலையில் அரசாங்கம் எவ்வாறு மேலதிக கடன் பெற்றுக் கொண்டது. நிதி அமைச்சர் கணக்காய்வாளர் நாயகத்தை விமர்சனம் செய்கின்றார், அவ்வாறு செய்ய அனுமதிக்க முடியாது. நிதி அமைச்சரே இந்தத் தவறை இழைத்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.