52 சதவிகித பிரிட்டன் மக்கள் விலகிக் கொள்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதால், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் என்பது 28 ஐரோப்பிய நாடுகள் சேர்ந்த கூட்டமைப்பாகும். இந்த ஒன்றியத்திலுள்ள நாடுகள் பொருளாதார நலனுக்காக யூரோ என்ற பொது கரன்சியைப் பயன்படுத்துகின்றன. தவிரவும் இந்த 28 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிற உறுப்பு நாடுகளுக்கு விசா இன்றிப் பயணிக்கவும், தங்கி வேலைசெய்யவும் முடியும்.
ஆனால் பிரிட்டன் தனக்கென பவுண்ட் கரன்சியை வைத்துக்கொண்டுள்ளது. அதற்கான முறைப்படியான அங்கீகாரத்துக்காக ஒன்றியத்திலிருந்து வெளியேற விரும்பியது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா- விலகுவதா என்பதை அறிய பொது வாக்கெடுப்பு நடத்த அந்நாடு முடிவுசெய்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடரவேண்டுமென கருத்துதெரிவித்த ஜோ காக்ஸ் எனும் எம்.பி. தீவிரவாதி ஒருவனால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டது இங்கிலாந்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனால் வாக்கெடுப்பு தேதி சற்று மாற்றியமைக்கப்பட்டது. இதன்படி நேற்று நடந்த வாக்கெடுப்பில் மொத்த மக்கள்தொகையில் 72 சதவிகிதம்பேர் வாக்களித்திருந்தனர். இந்த வாக்குகளில் 52 சதவிகிதம் விலகுவதற்கு ஆதரவாகவும், 48 சதவிகிதம் விலகக்கூடாதெனவும் விழுந்திருந்தது. எனவே பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது உறுதியாகியுள்ளது.
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரான நிகல் பேரஜ், “இந்த வெற்றியை எந்த நாடுகளின் ஆதரவும் இன்றி தனி நாடாக போராடிப் பெற்றுள்ளோம். போரில் வென்றுள்ளதுபோல் உணர்கிறேன். இங்கிலாந்து இனி சரியான பாதையில் பயணிக்கும்” என கூறியுள்ளார்.