அமெரிக்காவில் 1000 அடி உயரத்தில் கண்டாடி சறுக்குப் பாதை
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2016 (சனிக்கிழமை)
அமெரிக்காவில் 73 மாடிகளை கொண்ட கட்டிடத்தின் உச்சியில் ஆயிரம் அடி உயரத்தில் கண்டாடி சறுக்குப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 73 மாடிகளை கொண்ட வானளாவிய கட்டிடம் உள்ளது. இதன் 70 மற்றும் 69 மாடிகளுக்கு இடையே வெளிப்புறமாக ஆயிரம் அடி உயரத்தில்மேல் இருந்து கீழ்நோக்கி வரும் வகையில் சறுக்குப் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த கண்ணாடி சறுக்குப்பாதை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சறுக்கு பாதை மக்கள் இடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சறுக்கு பாதை சுமார் தரையில் இருந்து 1000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளாதேடு இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பாடாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.