காங்கேசன்துறை புகையிரத நிலையம் நாளை முதல் மக்கள் பாவனைக்கு : 201.8 ஏக்கர் நிலமும் மக்களிடம் கையளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/06/2016 (வெள்ளிக்கிழமை)
கடந்த 26 வருடகாலமாக இராணுவத்தினர் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி இருந்த வலி.வடக்கின் காங்கேசன் துறை ரயில் நிலையம் உள்ளிட்ட 201.8 ஏக்கர் பரப்பளவிலான நிலம், பொதுமக்களிடம் நாளை சனிக்கிழமை கையளிக்கப்படவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, குறித்த நிலத்தை பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளார். இந்நிகழ்வில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி.சில்வா, யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். குறித்த பிரதேசத்தில் வாழ்ந்து தற்போது இடம்பெயர்ந்து உள்ள மக்கள் நாளைய தினம் காலை 9 மணிக்கு முன்னர் காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.