ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் உரி செக்டாரில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையிலான சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகி வருகிறது. உரி செக்டாரில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நீடித்தது. இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து இருதரப்பு இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது, தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.