ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பெரும்பாலோர் விலக வேண்டும் என்று வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து, மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக கூறிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், அக்டோபரில் பதவி விலக உள்ளதாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் பிரிட்டனுக்கான கமிஷனர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜோனதன் ஹில் நேற்று அறிவித்தார். தற்போதைய சூழ்நிலையில், தனது பணியை முறையாக மேற்கொள்ள முடியும் என்பதில் நம்பிக்கையில்லை என அவர் கூறியுள்ளார்.