சுவிட்சர்லாந்தில் உள்ள இ.டி.எச். ஷுரிச் மற்றும் லுசர்ன் பல்கலைக்கழகத்தின் என்ஜினீயரிங் மாணவர்கள் 1.513 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய கார் ஒன்றை தயாரித்துள்ளனர். இந்த கார் அதிநவீன எலக்ட்ரிக் பந்தயத்துகாக தயார் செய்துள்ளனர். மேலும் இந்த கார் 1.513 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தில் 30 மீட்டர் தூரம் ஓடியது. கடந்த ஆண்டு ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் பல்கலைக் கழக மாணவர்கள் 1.779 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தில் இயக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சாதனையை சுவிட்சர்லாந்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் முறியடித்தனர்
மேலும் ஷுரிச் அருகே உள்ள குபெசன்டார்ப் விமானப் படை தளத்தில் உள்ள ஓட்டப்பந்தய மைதானத்தில் இச்சாதனையை படைத்தனர். இந்த காரை 30 என்ஜினீயரிங் மாணவர்கள் தயாரித்துள்ளனர். சர்வதேச அளவில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கான பார்முலா கார் பந்தயத்தில் பங்கேற்க இக்கார் உருவாக்கப்பட்டது.