நல்லிணக்க பொறிமுறையின் அவசியம் குறித்து தென்னிலங்கை மக்களை தெளிவுபடுத்துங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2016 (புதன்கிழமை)
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் தென்னிலங்கை மக்களை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். தென்னிலங்கை மக்களை தெ ளிவுபடுத்தாமல் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கம் அர்த்தமற்றதாகி போகும் அபாயம் உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் உலக தமிழர் பேரவையின் தலைவர் டாக்டர் இம்மானுவேல் அடிகளார் எடுத்துரைத்துள்ளார்.
தென்னிலங்கை மக்களை தெளிவுபடுத்தாமல் அரசாங்கம் நல்லிணக்கம் தொடர்பில் சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்குவதில் அர்த்தமில்லை எனவும் அவர் அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீரவை நேற்று ஜெனிவா வளாகத்தில் சந்தித்து பேச்சு நடத்தியபோதே இம்மானுவேல் அடிகளார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பி்ன்போது இம்மானுவேல் அடிகளார் மேலும் குறிப்படுகையில்
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் தென்னிலங்கை மக்களை தெ ளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். தென்னிலங்கை மக்களை தெ ளிவுபடுத்தாமல் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கம் அர்த்தமற்றதாகி போகும் அபாயம் உள்ளது. தென்னிலங்கை மக்களை தெ ளிவுபடுத்தாமல் அரசாங்கம் நல்லிணக்கம் தொடர்பில் சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்குவதில் அர்த்தமில்லை.
நாட்டில் நல்லிணக்கம் முன்னெடுக்கப்படுமென நீங்கள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் கூறிவருகின்றீர்கள். ஆனால் இவ்வாறு வாக்குறுதி வழங்குகின்ற அதேவேளை நல்லிணக்கத்தின் அவசியம் மற்றும் அரசியல் தீர்வின் முக்கியத்துவம் குறித்து தென்னிலங்கை மக்களை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். இது தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மங்கள சமரவீர இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.
1994 ஆம் ஆண்டு வென்தாமரை இயக்கம் ஊடாக நாட்டின் நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர் மங்கள சமரவீர, அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தும் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை புலம்பெயர் அமைப்புக்களும் அரசாங்கமும் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.