மஹரகம, கொட்டாவ மற்றும் ஹோமாகம உட்பட பல இடங்களில் நாளை (16) பகல் 12.00 மணி முதல் இரவு 12.00 மணிவரையான 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பட்டிய, ஹோமாகம, ருக்மலகம,பெலன்வத்த, மட்டேகொட,மீபே,ஹங்வெல்ல, களுகல்ல,மற்றும் பாதுக்க போன்ற பகுதிகளில் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடுவலை பகுதியில் வழங்கப்படும் நீரின் அளவு வழமையை விட குறைவாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலதுவெவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் அவசர புனரமைப்பு பணிகளின் காரணமாக குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.