மக்காவில் ஆபத்தான வீதி.... நெகிழ வைக்கும் காட்சிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2016 (திங்கட்கிழமை)
நபி அவர்கள் இந்த உம்மத்தின் ஈடேற்றத்திற்காக ( ஏன் எம் ஒவ்வொருவரினதும் ஈருலக வெற்றிக்காக ) தம்மை முழுமையாக அர்ப்பணித்து, அன்னார் மேற்கொண்ட எண்ணிலடங்காத பாரிய தியாகங்களில் ஒரு சிறு துளியை ஒரு காணொளி வடிவில் நாம் பார்த்து, அதனை எமது மனத்திரை முன்னே நிலைநிறுத்தி அவர்களின் தியாகங்களை சற்றேனும் நாம் உணர்ந்து கொள்ளவும் அதனூடே எமது வாழ்கையை அவர்களது வழிகாட்டல்களின் படி அமைத்துக் கொள்ளவும் ஆவன செய்வதே எனது இப் பதிவின் நோக்கமாகும்.
ஆம் அன்னார் மேற்கொண்ட அவ்வாறான மிகக் கடினமான பணிகளில் ஒன்றுதான் தாஇப்திற்கான அன்னாரது தஹ்வாப் பயணம். சவால்கள் நிறைந்திருந்த அப்பயணத்தில் அன்னவர்கள் சந்தித்த பயணப் பாதையானது ( மக்காவில் இருந்து தாஇப்தி வரை ) சுமார் 100 KM தூரமுடையதாகும் என்பது எம்மில் பலருக்கு தெரியாது.
( மக்காவின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு கிராமம் என்றே தாஇப்திஐ பற்றி எம்மில் பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்)
மக்காவில் இருந்து தாஇப்தி செல்லும் பாதையை காண்பிக்கும் காணொளி தான் இப் பதிவை இங்கே கொண்டு வரும் படி என்னை தூண்டியது. ஆம் குறித்த பாதையானது உயரமான மலைகளாலும் குன்றுகளாலும் கற்பாரைகளாலும் சூழப் பட்ட, கரடுமுரடான, ஆபத்தான பாதையாகும்.குறித்த பாதை இன்று பொழிவு பெற்று, மின்குமில்களால் அலங்கரிக்கப் பட்டு, நெடுஞ்சாலையாக மாற்றப் பட்டுள்ள போதிலும் இன்றளவிலும் அது எவ்வளவு ஆபத்துகள் நிறைந்த பாதையென்பதை கீழே தரப்பட்டுள்ள காணொளியை கண்ட மாத்திரத்திலேயே நாம் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்.