துருக்கியில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்; பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/07/2016 (சனிக்கிழமை)
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
துருக்கியில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். துருக்கி மட்டுமல்ல பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசுவேன். தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. வருகிற தை மாதத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்.