இங்கிலாந்து இளவரசியின் ஆடை விவகாரம் மகாராணி எலிசபெத் அதிருப்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/04/2016 (திங்கட்கிழமை)
இந்தியா மற்றும் பூடான் ஆகிய இரு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசியின் ஆடை வடிவமைப்பு மகாராணி எலிசபெத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியா மற்றும் பூடான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக இளவரசி கேட் மிடில்டன் ஒரு வாரத்திற்கு அணிய வேண்டிய ஆடைகள் இந்தியா மற்றும் பூட்டானில் வடிவமைக்கப்பட்டு லண்டனில் உள்ள அரண்மனைக்கு அனுப்பப்பட்டது.
பின்னர், ஆடைகளை பார்த்து தனது விருப்பத்திற்கு மாற்றம் செய்து கேட் மிடில்டன் அணிந்துக் கொள்ள மீண்டும் வடிவமைக்கப்பட்டது. இந்த ஆடைகளை தான் இந்தியா மற்றும் பூட்டான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளவரசி அணிந்துள்ளார். ஆனால், இதிலும் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
இளவரசி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வீடியோ காட்சிகளை பிரித்தானியாவில் உள்ள மகாராணி இரண்டாம் எலிசபெத் பார்த்து முகம் சுழித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், இளவரசி அணிந்திருந்த ஸ்கர்ட் ஆடை காற்றில் அடிக்கடி மேல் நோக்கி எழுந்து இளவரசியின் கால்கள் தெரிந்தது தான் தற்போது மகாராணியை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக, ஆடைகளை எப்படி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என இளவரசிக்கு மகாராணி அறிவுரைகள் கூறியதாகவும், ஆனால் இந்தியாவில் அவர் மகாராணியின் அறிவுரையை பின்பற்றாமல் நடந்துக்கொண்டது தான் மகாராணியை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக இங்கிலாந்து அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன