ஹிலாரி கிளின்டன் கவலை: தீவிரவாதிகள் பிடியில் பாகிஸ்தான் அணுஆயுதங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/09/2016 (வெள்ளிக்கிழமை)
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளின்டன், தனது கட்சி தலைவர்களுடன் பேசிய ஆடியோ ஒன்று, ஜனநாயக கட்சியின் கம்ப்யூட்டரில் இருந்து திருடப்பட்டு வெளியாகி உள்ளது. அதில் ஹிலாரி கூறியுள்ளதாவது: இந்தியாவுடன் போட்டி போட்டு பாகிஸ்தான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது. ஆனால் அங்குள்ள தீவிரவாதிகள் பாகிஸ்தான் அரசை கவிழ்த்து அணு ஆயுதங்களை கைப்பற்றும் அபாயம் உள்ளது. பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் எங்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. இது கற்பனை செய்ய முடியாத அளவு வளர்ச்சியாகும். இவ்வாறு ஹிலாரி பேசினார்.