அமெரிக்க அதிபர் வேட்பாளர்களுக்கான தேர்தல்: ட்ரம்ப் 5 மாநிலங்களிலும், ஹிலாரி 4 மாநிங்களில் வெற்றி.
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2016 (புதன்கிழமை)
அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர்களுக்கான தேர்தலில், அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர்களுக்கான தேர்தலில், நேற்று வாக்குப் பதிவு நடைபெற்ற 5 மாநிலங்களிலும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றிகளுடன் சேர்த்து 950 பிரதிநிதிகளின் வாக்குகள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவதற்கு இன்னும் 300 வாக்குகள் மட்டுமே அவருக்குத் தேவை. முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ட்ரம்ப், தாம் அதிபர் வேட்பாளராவதை இனி யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.
ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை, 4 மாநிலங்களிலும் ஹிலாரி கிளிண்டனும், ரோட் ஐலேண்ட் மாநிலத்தில் பெர்னி சாண்டர்ஸும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் களமிறங்குவதற்கான வாய்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது.