இரண்டாம் உலகப்போரின் போது காணாமல் போனதாக கூறப்படும் வரலாற்று புகழ்மிக்க நாஜி தங்க ரயிலின் மறுவடிவமைப்பு போலந்து நாட்டில் தயாராகி உள்ளது. 1945-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில் போர் தளவாடங்கள், விலையுயர்ந்த பொருட்களை சுமந்து சென்ற ஜெர்மனி ராணுவத்தின் ரயில் தான் நாஜி தங்க ரயில். சுரங்க பாதை வழியாக சென்ற போது தங்க ரயில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு ரயிலில் விலை உயர்ந்த தங்க பொருட்கள் இருப்பதை அறிந்த கொள்ளையர்கள், அதனை களவாடும் முயற்சியில் கடந்த 2 ஆண்டுகளாக ஈடுபட்டு தோல்வியை தழுவியுள்ளனர்.
ரயில் காணாமல் போனதாக கூறப்படும் சுரங்க பாதையை கண்டறிய முடியாததே இதற்கு காரணம். தற்போது போலந்து அரசு தங்க ரயிலின் மூலவடிவத்தை கொண்டு அதனை மீட்டுருவாக்கம் செய்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்த வடிவமைப்பாளர் ஒருவர், நீண்ட ஆராய்ச்சிக்கு பின் இந்த யோசனை தோன்றியதாகவும், இருப்பினும் தீவிரமாக முயற்சி செய்தும் காணாமல் போன ரயிலை கண்டறிய முடியவில்லை என்றார். அதனால் அச்சு அசலான புது தங்க ரயில்