தோல்வியை ஜீரணிக்க கடினமாக உள்ளது றொயல் சாலஞ்சர்ஸ் அணித் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து பேசிய றொயல் சாலஞ்சர்ஸ் அணித் தலைவர் விராட் கோஹ்லி, தோல்வியை ஒப்புகொள்ள கடினமாக உள்ளது.
கிறிஸ் கெயிலின் பார்மை நினைத்து கவலைப்படவில்லை. அவர் சரியான நேரத்தில் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவுவார்.
நாங்கள் வாட்சன் விக்கெட்டை விரைவாக இழந்துவிட்டோம். மேலும், 10 முதல் 15 ஓட்டங்கள் நாங்கள் குறைவாக எடுத்துள்ளோம்.
டெல்லி அணியினர் நன்றாக துடுப்பாடினர். அதிலும் குறிப்பாக டி-காக் சிறப்பாக விளையாடி, ஆட்டத்தை அவர்கள் பக்கம் இழுத்து சென்றுவிட்டார். மேலும் கருணும் சிறப்பாக விளையாடினார்.
நாங்கள் 200 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தோம். ஆனால் டெல்லி அணி சிறப்பாக பந்து வீசியதால் எங்களால் ஓட்டங்களை எடுக்க முடியவில்லை.
ஷமி, மோரிஸ், பிரத்வைட் என அனைவரும் சிறப்பாக பந்து வீசி எங்களை கட்டுப்படுத்தினர் என பேசியுள்ளார்.