இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகளில் மக்கள் குவிந்துள்ளனர். அன்றாட தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.மேலும் உச்சநீதிமன்றத்தில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை வாபஸ் பெறக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கிற்கு தடை விதிக்க கோரி மத்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது, இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது. மேலும் மத்திய அரசு சார்பில், வங்கி கவுண்டர்களில் மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை செலுத்த அனுமதிப்பதால்தான் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.இதனால் வங்கி கவுண்டர்களில் பழைய ரூபாய் நோட்டுகளை செலுத்துவது குறித்தும், மாற்றுவது குறித்தும் ஆலாசனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.