ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ராணுவ விமானம் டியு-154, சோச்சி விமான தளத்தில் இருந்து 91 பயணிகளை ஏற்றிக் கொண்டு, சிரியாவை நோக்கி, ரஷ்ய நேரப்படி அதிகாலை 5.20 மணிக்கு புறப்பட்டது.
அதன்பின் சரியாக 20 நிமிடங்களில் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த விமானம் என்னவாயிற்று என்ற பதட்டம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த விமானம் கருங்கடலில் விழுந்து விட்டதாக ரஷ்யா செய்தி நிறுவங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. எனவே அதில் பயணம் செய்த 91 பேரும் இறந்து விட்டதாகவே கருதப்படுகிறது.
இந்த சம்பவம் ரஷ்ய நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது