அலங்காநல்லூரில் இரவிலும் தொடரும் போராட்டம் : பெண்கள் அரணாக போராட்ட களத்தில் இருப்பதால் போலீசார் திணறல்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2017 (திங்கட்கிழமை)
அலங்காநல்லூர்: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் போராட்டம் இரவிலும் தொடர்ந்து வருகிறது. ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கு, கிராம மக்களே சாலையிலே உணவு சமைத்து பரிமாறினார். ஊர் பெண்கள் அரணாக போராட்ட களத்தில் இருப்பதால் போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தாசில்தார், ஆர்.டி.ஓ., காவல்துறை அதிகாரிகள், ஊர்கமிட்டியினர் வேண்டுகோள் விடுத்தும் போராட்டத்தை கைவிட மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
எராளமான போலீஸார் அலங்காநல்லூரில் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதட்டமான சூழல் தொடர்கிறது. போலீசார் எந்நேரமும் தடியடி நடத்தலாம் எனவும் தடியடி நடத்தினாலும் நாங்கள் களைய மாட்டோம் இளைஞர் தெரிவித்துள்ளனர். மேலும் வாடிவாசல் வழியாக 5 காளைகளையாவது அவிழ்த்துவிட்டால் தான் இந்த கூட்டம் களையும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.