தற்கொலை அங்கி நபர் தப்பியோட்டமாம்: பொலிஸார் புதுக்கதை
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2016 (திங்கட்கிழமை)
சாவகச்சேரியில் அண்மையில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சபிரதான சந்தேக நபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தற்கொலை அங்கி தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் போது இந்த விடயம் அம்பலமானதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாத இறுதி வாரத்தில் குறித்த பிரதான சந்தேக நபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதான சந்தேக நபர் தப்பிச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அண்மையில் சிவகரன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பயங்கரவாத தடைப் பிரிவினால் கைது செய்யப்பட்ட சிவகரன் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதுடன், ஒரு வருடத்திற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சிவகரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை, சிவகரன் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலேயே பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.