தமிழர்களின் உணர்வுகளை பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசெல்ல உள்ளேன் : முதல்வர் ஓ.பி.எஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2017 (புதன்கிழமை)
தமிழக மக்களின் பாரம்பரிய உணர்வுகளை பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசெல்ல உள்ளேன் என்று தெரிவித்தார். மேலும் இளைஞர்கள் தம்மை சந்தித்து பேசியதாக முதல்வர் ஓ.பி.எஸ் தகவல் தெரிவித்தார்.
தமிழகத்துக்கு தேவையான வறட்சி நிவாரணத் தொகையை பிரதமரிடம் கேட்க உள்ளேன். மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது, எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே சமூக உறவு இருக்க வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் கருத்து என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் ஓ.பி.எஸ் பேச்சுவார்த்தை
முன்னதாக முதல்வரின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தை நடத்த இளைஞர்கள் குழுவினர் அவரது இல்லம் சென்றனர். முதலமைச்சர் ஓ.பி.எஸ். இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி சென்னை மெரினாவில் தொடர்ந்து 2 நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.