உலக நாடுகளுக்கு சவலாக திகழ்ந்து வரும் வட கொரியா தலைவர் கிம் ஜோங்-உன்னின் சகோதரரான 45 வயதான கிங் ஜோங்-நாம் மலேசியாவில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தலைநகர் கோலாலம்பூரில் உள்ள விமானநிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வட கொரியா நபர் ஒருவர் உயிரிழந்ததாக மூத்த மலேசியா பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போது இறந்த நபர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.1994 ல் இருந்து வட கொரியாவை ஆண்ட கிம் ஜோங்-இல்லின் மூத்த மகன் கிம் ஜோங்-நாம் என்பது குறிப்பிடத்தக்கது.