காதலில்லா தூய நட்பு! டொனால்ட் றம்பின் மகளிற்கு மிகவும் பிடித்துப் போன கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ!
பிரசுரிக்கபட்ட திகதி: 17/03/2017 (வெள்ளிக்கிழமை)
இவாங்கா மனமுடித்தவர். மூன்று பிள்ளைகளிற்கு தாய். கனடியப் பிரமருக்கும் மூன்று பிள்ளைகள். அவரது குடும்பமும் அழகான ஒரு குடும்பம். இந்த நட்பின் மூலம் உலகத்தையே புரட்டிப்போட்டு விட்டார் கனடியப் பிரதமர்.
புதிய குடிவரவாளர்களிற்கும் அகதிகளிற்குமான குரலாக அவர்களது முகமாக துணிந்து செயற்படும் கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அவர்கள் குடிவரவாளர்களை அமெரிக்க ஒதுக்க முடியாது என்பதை மிகவும் கனகச்சிதமாக கற்பித்திருக்கின்றார்.
எப்படியென்றால், கடந்த சில வாரங்களிற்கு முன்பாக கனடாவின் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அமெரிக்காவிற்கு டொனால்ட் றம்பைச் சந்திக்கச் சென்றிருந்த போது, இவாங்கா றம்ப் “ஜஸ்ரின் ரூடோவை” வைத்த கண் வாங்காதபடி பார்த்ததையே பல ஊடங்களும் செய்தியாக்கியிருந்தன.
அப்படி ஒரு பிரமிப்புப் பார்வை. அமெரிக்கா, கனடாவையும் தாண்டி இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் முக்கிய ஊடகங்கள் கூட தலைப்புச் செய்திகளாக அன்றைய தினத்தில் இதனையே குறிப்பாக இவாங்கா றம்ப் ஜஸ்ரினை நோக்கும் புகைப்படத்தையே பிரசுரித்திருந்தன.
இப்போது கனடாவின் பிரதமர் ஒருபடி மேலே சென்று விட்டார். அமெரிக்காவின் தலைசிறந்த நாடக அரங்கான புரோட்வே இயலிசை அரங்கில் இடம்பெற்ற “தூரத்திலிருந்து வந்தவர்கள்” என்ற நாடக நிகழ்வைப் பார்க்கச் சென்றிருந்தார்.
அப்படிச் சென்றவர் விருந்தினராக அழைத்துச் சென்றது டொனால்ட் றம்பின் மகளான அதே இவாங்கா றம்பையே. இது போதும் ஊடகங்களிற்கு. கனடியப் பிரதமர் இராஜதந்திரத்தை முறையாகவே பயன்படுத்துகின்றார், டொனால்ட் றம்பை கனடாவிற்கு நண்பனாக்குகின்றார் என்றன.
அதிலும் “நியூயோர்க் ரைம்ஸ்” பத்திரிகை 34 மில்லியன் மக்கள் பின் தொடரும தனது ருவிட்டரில்; “மற்றைய நாட்டவர்களில் தங்கியிருக்காமல் உங்களால் ஏதுமே முடியாது என்பதை டொனால்ட் றம்பிற்கு ஜஸ்ரின் ரூடோ புகட்டியுள்ளார்” என்று இவாங்கா றம்புடன் அவர் நாடகத்திற்குச் சென்றதைத் தெரிவித்திருந்தது.
மகள் ஊடான இராஜதந்திரம்” Daughter Diplomacy எனப் பெயர் சூட்டப்பட்டு இந்த விடயத்தை ஆராயும் அரசியலாளர்கள் அனைவரும் நேரடியாகவோ அல்லது மறைமுகவோ ஒரு விதண்டாவாதத் தலைவருடனான உறவை ஏற்படுத்துவதற்கு ஜஸ்ரின் ரூடோ மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றது.
கனடாப் பிரதமர் சாட்சாத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் றம்பையே, 2001 செம்டம்பர் தாக்குதலின் போது அமெரிக்கா வான்பரப்பு மூடப்பட்ட போது கனடாவின் நியூபவுன்லாண்டிற்கு வந்திறங்கிய விமானங்களில் வந்தவர்களிற்கான உபசரிப்பை வைத்து உருவாக்கப்பட்ட இந்த நாடகத்தைப் பார்க்க அழைப்பு விடுத்தார்.டொனால்ட் றம்ப் தனக்கு நேரமில்லையென்பதைத் தெரிவித்து, என்னுடைய மகளை அனுப்புகின்றேன் எனக் கூறி வெள்ளை மாளிகை அதிகாரிகளுடாக அதற்கான ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருந்தார்.
பிறந்தால் ஜஸ்ரின் ஆகப் பிறந்திருக்க வேண்டும். இல்லையேல் அவரின் அழகில் சிறிதைத் தானும் பெற்றிருக்க வேண்டும் என உலக இளைஞர்களை அதிகமாகக் கவலைப்பட வைக்கும் ஒருவராக கனடியப் பிரதமர் மாறிவிட்டார்.இங்கிலாந்தின் காந்தக் கண்ணளகியான இளவரசி கேற் மிடில்டொன் வில்லியம்ஸ் அவர்கள் கூட கனடா விஜயத்தின் போது பிரதமர் ஜஸ்ரின் ரூடோவுடன் சிரித்துப் பழகியதைப் போல யாருடனும் இதுவரைப் பழகவில்லை என்று அப்போது இங்கிலாந்து ஊடங்கங்கள் பொறாமைப்பட்டிருந்தன.ஜஸ்ரின் ரூடோ அவர்கள் செய்கின்ற காரியமெல்லாம் கடைசியாக குடிவரவாளர்களையும் அகதிகளையும் இம்சைப்படுத்தாதே! அவர்களிற்கான குரலாகக் கனடா இருக்கின்றது என்பதை தெரிவிப்பதாகவே இருப்பதை ஏனைய நாட்டவர்கள் விரும்பி வரவேற்கின்றார்கள்.
கடந்த வாரம் கூட பல பெண்கள் ஜஸ்ரின் ரூடோ அவர்கள் சேட் அணியாமல் இளவயதில் எடுத்த படங்களை ருவிட்டரில் பரப்பி தங்களது அவர் மீதான அப்பழுக்கற்ற ஈர்ப்பை வெளிப்படுத்தி, ஆண் மகன் என்றால் இவர் போல இருக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்திருந்தனர்.